21.2.12

உலக நியதிகளை மதிக்காது இலங்கை ஆட முடியாது; எச்சரிக்கிறார் மங்கள சமரவீர

news

"இந்த அரசால் தொடர்ந்தும் நாட்டை நிர்வகிக்க முடியாது. அரசு தொடர்ந்தும் ஆட்சிப்பீடத்தில் இருக்கு மானால் நாடு நாசமாகி விடும்''   என்று அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐ.தே.க. எம்.பியும், முன்னாள் வெளிவிவகார அமைச் சருமான மங்கள சமர வீர.
 
சுயாதீன நாடு என்பதால் உலக நியதி, சம்பிரதாயங்களை மதிக்கா மல் ஆடமுடியாது. அவ்வாறு செய் யும் பட்சத்தில் ஜனநாயக நாடுகள் வேடிக்கை பார்க்காது. லிபியா, சிரியா போன்ற நாடுகள் உலக நியதியை மீறிச் செயற் பட்டதாலேயே அங்கு அவலங்கள் நேர்ந்தன என்றும் அவர் கூறினார்.
 
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததற்கான முழு உரிமையையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனித்து அனுபவிக்க முடியாது. சந்திரிகா, ரணில் போன்ற தலைவர்களுக்கும் அதில் பங்குண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
 
அந்தச் செவ்வியில் அவர் முக்கியமாகக் கூறியுள்ள விடயங்கள் வருமாறு:
யுத்தத்தின் பின்னர் நாடு ஆச்சரியமான பாதையை நோக்கிப் பயணிக்கின்றது. நாட்டின் அபிவிருத்தி 8 சதவீதமா கவுள்ளது. இப்படியெல்லாம் கூறுவது அரசே தவிர, மக்கள் அல்லர்.
 
8 சதவீத அபிவிருத்தி இருக்குமானால் அது மக்களின் கண்களுக்குப் புலப்படாமல் இருப்பதன் மர்மம் என்ன? இந்த அரசுக்கு சிறந்த முறையில் பொருளாதார முறைமையை வழிநடத்தத் தெரியாது என்பதை விட அதனால் முடியாது எனக் கூறுவதே பொருத்தமாகவிருக்கும். இந்த நாடு தற்போதைய அரசின் கீழ் பயணிக்க முடியாது. அவ்வாறு செல்லும் பட்சத்தில் நாட்டின் எதிர்காலம் நாசமாகிவிடும்.
 
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் உரிமையில் ஒரு பகுதியே மஹிந்த ராஜபக்ஷவைச் சாரும். அதை அவர் தனியாக உரிமை கொண்டாட முடியாது.சந்திரிகா, ரணில் உள்ளிட்ட தலைவர்களும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்குப் பாடுபட்டவர்களாவர். சந்திரிகா. இராணுவத்தைப் பலப்படுத்தினார். எல்.ரி.ரி.ஈ யிடமிருந்து கருணாவைப் பிரித்தெடுத்து அவ்வமைப்பை இரண்டாகப் பிளவுபடுத்தி யுத்தம் செய்யும் சக்தியை மழுங்கடிக்கச் செய்தவர் ரணில்.
 
நான் வெளிவிவகார அமைச்சராகப் பதவிவகித்த காலத்தில் 26 ஐரோப்பிய நாடுகளில் புலிகள் அமைப்பைத் தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுத்தேன். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளும் தடைசெய்தன. அதேபோன்று ஜெனரல் உள்ளிட்ட இராணுவத் தினரின் அர்ப்பணிப்பு காரணமாகவே யுத்தத்தை வெற்றிபெறக்கூடியதாக இருந்தது.  யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி நம்பிக்கையை ஏற்படுத்தி அரசியல் தீர்வொன்றை வழங்கி சர்வதேசத்துடன் இணைந்து துரித அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கக்கூடிய சூழ்நிலை இருந்தது. ஆனால், ஆட்சியாளர்கள் அப்போது மூளையில்லாத மடையர்களாக இருந்தனர். சர்வதேசத்திற்குப் பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசினர். இன்று நாட்டின் அபிவிருத்திக்கு சர்வதேசம் உதவாமல் மாறாகப் பொருளாதார அரசியல் ரீதியிலான தடைகளைவிதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதலீடுகள் வருவதற்குப் பதிலாக உள்ள முதலீட்டாளர்களும் நாட்டைவிட்டு ஓடுகின்றனர். பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன. ஐ.தே.க. பெற்றுக்கொடுத்த 5 ஆயிரம் கோடி "ஜி.எஸ்.பி" வரிச்சலுகையையும் இழந்துள்ளது இந்த அரசு. 
 
மக்கள் தொடர்ந்தும் அரசின் ஏமாற்று வித்தையான ஆச்சரியம் என்ற கதையை நம்பமாட்டர். ஆசியாவில் அதிக மின்கட்டணம், தெற்காசியாவில் அதிகளவான எரிபொருள் விலைக்கட்டணம், வேலையின்மை, குடும்ப ஆட்சி, ஜனநாயக விரோதச்செயல், ஊடக அடக்குமுறை என்பன இலங்கையிலேயே உள்ளது. உலக நாடுகள் தற்போது இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன. இந்நிலையில், நாட்டை ஆச்சரியமாக்க முடியுமா?
 
"காபெட்" வீதிகளுக்கு மேலாக "காபெட்" போட்டு பணத்தை ஆட்சியாளர்கள் கொள்ளையடித்தால் நாடு எப்படி அபிவிருத்தியடையும்? முன்னைய அரசுகள் ஆரம்பித்துவைத்த செயற்றிட்டங்களுக்கு இந்த அரசு பெயர்ப்பலகையை மாத்திரமே பொருத்தியுள்ளது. நாட்டின் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு சந்திரிகா, ரணில் போன்றவர்களே  நிதியுதவிகளைத் தங்களது ஆட்சிக்காலத்தில் பெற்றுக்கொடுத்தனர்.
 
சர்வதேசத்தைப் பகைத்துக்கொண்டுள்ளமையால் இந்த அரசு சீனாவிடம் அதிக வட்டிக்கு கடன் பெறுகின்றது. எரிபொருட்களின் விலையை 40 சதவீதத்தால் அதிகரித்த நாடொன்று உலகில் இல்லை. இந்த ஆட்சியாளர்களுக்கு நிர்வாகம் தெரியவில்லை. மக்கள் வழங்கிய ஆணையை தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கே பயன்படுத்துகின்றனர்.
(U) G.JK MEDIA WORKS NEWS TEAM 2012

செய்திகள்

நோர்வேயில் மாயமாகும் தமிழ்க் குழந்தைகள்

நாள்காட்டி

Online Now

மழைநீர் சுத்தமானது அது எங்கு விழகிறதோ அதாகவே மாறுகிறது நண்பர்களும் அப்படித்தன் சேருமிடம் அறிந்து சேர்...!
நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

Video News

மரண அறிவித்தல்

http://picasion.com/i/1VofP/http://picasion.com/i/1VeRW/-.-

நினைவஞ்சலி

1ம் ஆண்டு நினைவஞ்சலி 31

நாணய மாற்றுக்கள்

செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்

தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..!