19.1.12

நிர்வாணமாகத் தோன்றிய நடிகை நாடு திரும்ப ஈரான் தடை விதிப்பு

  ஈரானிய நடிகை ஒருவர் அந்நாட்டுக்குள் பிரவேசிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியாகும் சஞ்சிகையொன்றில் இவர் நிர்வாணமாகக் காட்சியளித்த காரணத்தினாலேயே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொல்சிப்தா பரஹானி என்ற அந்நடிகையின் புகைப்படம் பிரான்ஸ் நாட்டு சஞ்சிகையான 'மெடமி லீ பிகாரோ' வில் இவ்வாறு வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சஞ்சிகையின் 'பேஸ்புக்' பக்கத்திற்கு ஈரான் மற்றும் மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து பல பார்வையாளர்களின் ஆதரவு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஈரான் சட்டதிட்டங்கள் காரணமாக, திரைப்படத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கொல்சிப்தா கடந்த வருடம் அந்நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இந்நிலையில், தனது சொந்த நாடான ஈரானுக்கு எவ்வேளையிலும் திரும்பிவரக் கூடாதென, தனக்கு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தல் விடுத்திருப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.

பரஹானி நிர்வாணமாகக் காட்சியளித்தமைக்குப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும், அவரின் துணிவினைப் பாராட்டி பலர் ஆதரவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(V) G.JK MEDIA WORKS NEWS TEAM 2011

செய்திகள்

நோர்வேயில் மாயமாகும் தமிழ்க் குழந்தைகள்

நாள்காட்டி

Online Now

மழைநீர் சுத்தமானது அது எங்கு விழகிறதோ அதாகவே மாறுகிறது நண்பர்களும் அப்படித்தன் சேருமிடம் அறிந்து சேர்...!
நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

Video News

மரண அறிவித்தல்

http://picasion.com/i/1VofP/http://picasion.com/i/1VeRW/-.-

நினைவஞ்சலி

1ம் ஆண்டு நினைவஞ்சலி 31

நாணய மாற்றுக்கள்

செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்

தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..!